திருக்கோணமலை மாவட்டத்தின் வரலாறு

16ம் நூற்றாண்டில் இம் மாவட்டம் போர்த்துக்கேயரினால் கைப்பற்றப்பட்டது. 1620 ன் ஆரம்பத்தில் புத்தாண்டு தினம் ஒன்றில் கொன்ஸ்ரன்ரைன் டீ சா என்பவரால் கோணேஸ்வரர் ஆலயம் சூறையாடப்பட்டு சிதைவுபட்ட நிகழ்வானது இம் மாவட்டத்தின் வரலாற்றிலே ஒரு திஐப்பமுனையாக அமைந்தது. 1693 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து இம் மாவட்டத்தை வெற்றி கொண்டனர். 1796 ஆம் ஆண்டில் இம் மாவட்டம் பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்டது.

01.10.1833 இல் செய்யப்பட்ட பிரகடனம் ஒன்றின் படி நிர்வாகக் காரணங்களின் பொருட்டு இந் நாடு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபோது திருகோணமலை கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. 1953 ஆம் ஆண்டுவரை சில சிறிய மாற்றங்களுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர இம் மாவட்டத்தின் எல்லைகள் மாற்றப்படாதிருந்தன. 1958 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பில் இருந்த கிழக்கு மாகாண அரசாங்க அதிபரின் நிர்வாகத்திற்குட்பட்ட உதவி அரசாங்க அதிபரால் இம் மாவட்டம் நிருவகிக்கப்பட்டு வந்தது.

1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து குச்சவெளி உதவி அரசாங்க அதிபரின் பிரிவிலுள்ள தென்னைமரவாடி (31ஈ) புல்மோட்டை (31ஐp) ஆகிய கிராம உத்திNhகத்தர் பிரிவுகளும் கோமரங்கடவெல உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவான பரணமதவாச்சிய (31வ்) வும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அநுராதபுர மாவட்டத்தின் பதவிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுடன் இணைக்கப்பட்டது.

பதவிய உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள பதவிஸ்ரீபுர (31டி) தென்னைமரவாடி (31ஈ) , பரண மதவாச்சிய (31எவ்) புல்மோட்டை (31ஐp) , ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 13 மே 1982 ஆம் திகதியிலிருந்து திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் உள்ளக எல்லைகளும் காலத்துக்குகாலம் மாற்றமுற்றன.

பிரதேசம்

திருகோணமலை மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. இம் மாவட்டம் வடக்கில் யான் ஓயாவையும், மேற்கில் அநுராதபுரம், பொலனறுலை மாவட்டங்கiளையும், தெற்கில் வெருகல் ஆற்றைம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 2630.8 சதுர கிலோமீற்றராகும். இதில் 96.7 சதுர கிலோ மீற்றர் நீர்ப்பரப்பாகும்.

உதவி அரசாங்க அதிபர் பிரிவுரீதியிலான நிலப்பிரதேச பரம்பல் அட்டவணை.

S.No

A.G.A. Division
(D.S.Division)

Area sq. km

No of Wards

No of Villages

No of G.S. Divisions

1 Town  and Gravets 148.0 12 66 42
2 Kinniya 146.9 7 61 31
3 Muthur 179.4 7 48 42
4 Kantalai 397.3 7 34 23
5 Seruwila 279.0 - 36 17
6 Gomarankadawela 285.0 - 43 10
7 Padavi Siripura 217.1 - 12 10
8 Kuchchaveli 313.3 - 30 24
9 Thampalakamam 244.4 - 45 12
10 Morawewa 322.4 - 29 10
11 Verugal (Echchilmpattu) 98.0 - 23 9
  Total 2630.8 33 427 230
Support provided by ICTA
Implemented by HITESDO, Sri Lanka